பாதிக்கப்பட்டவர்களுக்காக
நீங்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறீர்களா? அதன் காரணமாக நம்பிக்கை இழந்து யாரை அணுகுவது என்று தெரியாமல் தவிக்கிறீர்களா?
வன்முறையற்ற வாழ்க்கை வாழ நம் அனைவருக்கும் உரிமை உள்ளது. வன்முறையில் இருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள பல வழிகள் உள்ளன. அதற்கான ஆலோசனை மற்றும் உதவியினை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.
தெர் தே ஃபாமினால் உங்களுக்கு உதவ இயலும்.
நீங்கள் ஒரு அனுபவமிக்க, துறைவல்லுனரான பெண்மணியிடம் இருந்து கட்டணமில்லா ஆலோசனை பெறலாம்.
நாங்கள் உங்கள் தாய் மொழியிலோ அல்லது மொழிபெயர்ப்பாளரின் உதவி மூலமோ உங்களுக்கு ஆலோசனை வழங்குவோம்
உங்களுக்கு அருகாமையிலேயே ஒரு பொருத்தமான ஆலோசனை மையத்தினை சிபாரிசு செய்வோம்.
நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
மேலும் உங்கள் பெயரைத் தெரியப்படுத்தாமலும் (அநாமதேய) ஆலோசனைகளைப் பெறலாம்.
தற்போதைய அதிக தேவை காரணமாக, துரதிர்ஷ்டவசமாக 2025 ஆம் ஆண்டு இறுதி வரை எந்த புதிய விண்ணப்பங்களையும் எங்களால் ஏற்க முடியவில்லை. இதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம், உங்கள் புரிதலுக்கு நன்றி.
அவசர உதவிக்குத் தொடர்பு கொள்ளுங்கள்
24-மணி நேர உதவித் தொலைபேசி எண்கள்
117 காவல்துறை
118 தீயணைப்புத் துறை
144 ஆம்புலன்ஸ்
143 Die Dargebotene Hand காணிக்கை கை
147 Beratung für Kinder und Jugendliche குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான ஆலோசனை
Frauenhäuser Schweiz சுவிட்சர்லாந்தில் பெண்கள் தங்குமிடங்கள் (தனிநபர், 24 மணி நேர உதவி எண்கள் இல்லை)
044 341 49 45 Mädchenhaus Zürich பெண்கள் வீடு சூரிச்
zwangsheirat.ch கட்டாய திருமணம்
Beratung für trans Personen | TGNS Transgender Network Switzerland திருநங்கைகளுக்கான ஆலோசனை | TGNS திருநங்கைகள் நெட்வொர்க் சுவிட்சர்லாந்து
24 மணி நேர வீட்டு வன்முறை ஹாட்லைன்கள்
பெர்ன் 031 533 03 03
சூரிச் 044 350 04 04
பேசல் 061 681 66 33
ஜெனீவா 084 011 01 10
லுகானோ 078 624 90 70
பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையங்கள்
முகப்பு | அசைலெக்ஸ்
INFORMATION FOR LGBT ASYLUM SEEKERS · QUEERAMNESTY
Recht | TGNS Transgender Network Switzerland
Freiplatzaktion Zürich|Rechtsarbeit Asyl & Migration
Solidaritätsnetz Bern | Anlaufstelle für Migrant*innen in Notsituationen
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு
உங்கள் நெருங்கிய வட்டத்திலிருந்து பாலின ரீதியில் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வழி குறித்து உங்களுக்கு நாங்கள் ஆலோசனை அளிக்கிறோம். மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக ஆலோசனை அளிக்கிறோம். இது ஒரு கட்டணமில்லா ஆலோசனையாகும்.
கீழ்க்காணும் நபர்களுக்கு ப்ராவா ஆலோசனை அளிக்கிறது
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு;
நண்பர்கள் மற்றும் நண்பிகளுக்கு;
மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் பிற நபர்களுக்கு.
ப்ராவா உங்களுக்கு கீழ்க்காணும் உதவிகளை அளிக்கிறது
பின்னணித் தகவல்கள்;
சாத்தியமான நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை;
உங்கள் பகுதியில் உள்ள உதவி மையங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
துறை வல்லுனர்களுக்காக
உங்கள் தொழில் ரீதியான வட்டத்திலிருந்து பாலின ரீதியில் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வழி குறித்து உங்களுக்கு நாங்கள் ஆலோசனை அளிக்கிறோம். மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக ஆலோசனை அளிக்கிறோம். இது ஒரு கட்டணமில்லா ஆலோசனையாகும்.
கீழ்க்காணும் நபர்களுக்கு ப்ராவா ஆலோசனை அளிக்கிறது
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு;
இளைஞர்களுக்கு ஆலோசனை அளிக்கும் வல்லுனர்களுக்கு;
பணி அளிப்பவர்களுக்கு;
பிற வல்லுனர்களுக்கு.
ப்ராவா உங்களுக்கு கீழ்க்காணும் உதவிகளை அளிக்கிறது
பின்னணித் தகவல்கள்;
சாத்தியமான நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை;
உங்கள் பகுதியில் உள்ள உதவி மையங்களுடன் துறை ரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.